ஒருபோதும் பயம் கூடாது
ஒருபோதும் பயம் கூடாது...
உங்கள் உடல், மனம், அறிவு இம்மூன்றையும் பலவீனமாக்கும் எதையும் நஞ்சென்று ஒதுக்கி விடுங்கள். அவற்றை மனதிற்குள் திணிக்காதீர்கள்.
வஞ்சனையால் எதையும் சாதிக்க முடியாது. அன்பாலும், உண்மையாலும் பெரிய செயலைக் கூட எளிதாகச் செய்து விட முடியும்.
பரந்த உலகில் பிறந்த நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லாவிட்டால், உங்களுக்கும் கல்லுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
பயமின்மையே வாழ்வின் ரகசியம். நமக்கு என்ன நேருமோ என்று ஒருபோதும் பயப்படவேண்டாம். பிறரிடம் இருந்து வரும் உதவியை மறுக்கின்ற அந்த கணமே சுதந்திரம் வந்துவிடும்.
நியாயமான கோபம் என்ற ஒன்று உலகில் இல்லை. ஏனெனில், அனைத்தையும் சமமாகக் காணத் தவறுவதால் தான் கோபமே உண்டாகிறது.
எண்ணங்களுக்கு நாம் உரிமை உடையவர்கள். நல்ல எண்ணங்கள் நம்மை நோக்கி வருவதற்காக உள்ளங்களைத் திறந்து வைக்க வேண்டியது நம் கடமை.
- விவேகானந்தர்
No comments:
Post a Comment