Tuesday, 26 March 2013

சிவன் கோயிலில் நுழைந்தவுடன்

சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும். சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போட வேண்டும். அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.

கடைசியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று "வந்தேன் வந்தேன் வந்தேன், இறைவனின் தரிசனம் கண்டேன், கண்டேன், கண்டேன் என மெதுவாக கூறி, இரு கைகளையும் மெதுவாக தட்டி, நன்றி சொல்லி வெளியே வர வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. அவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோயிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோயிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புவான். அவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

Thursday, 21 February 2013

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள்

1.
சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரிஎன அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2.
தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3.
சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4.
செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5.
தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6.
மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7.
ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8.
இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9.
அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10.
எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11.
உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12.
குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்
Top of Form


வெற்றி பெற்றவர்களை கவனி!..


வெற்றி பெற்றவர்களை கவனி!...

உள்ளம் தூய்மையானால் உலகமும் தூயதாகிவிடும். இந்த உண்மையை உலகுக்கு கூற வேண்டிய அவசியம், முன்பு என்றும் இல்லாத அளவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

நாம் முன்னேற முதலில் நம்மிடம் நம்பிக்கை வேண்டும்; பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன் கடவுளிடமும் நம்பிக்கை வைக்க முடியாது.

உள்ளத்துக்குள் இருக்கும் அனைத்தையும் துறந்துவிடு, வைராக்கியத்தைக் கடைபிடி, இதுவே உண்மையான தியாகம். இது இல்லாமல் உனக்கு ஆன்மிகம் கிடையாது.

கல்வி, அறிவு, செல்வம், ஆள்பலம், வலிமை, தைரியம் என்று இயற்கை நமக்கு கொடுத்திருக்கின்ற அனைத்தும், பிறருக்குக் கொடுப்பதற்குத் தான்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களைக் கவனி. ஒவ்வொருவரின் பின்னணியிலும், அளவற்ற கடமையுணர்வும், நேர்மையும் இருந்தே தீரும்.

- விவேகானந்தர்

Sunday, 10 February 2013


முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது

இந்து சமய நம்பிக்கைகள்


இந்து சமய  நம்பிக்கைகள்!


நம்முடைய பண்பாடு, கலாசாரம் ஆகியவைகளில் விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டையும் உணரலாம். இந்தியப் பண்பாடு, கலாசாரம் ஆகியவைகளுடைய சிறப்பை உணர்ந்த உலக மக்கள், அவைகளை மதித்து பின்பற்றுகிறார்கள். இத்தனை பெருமைகளைக் கொண்ட நம்முடைய பண்பாட்டையும், கலாசாரத்தையும் இந்த உலகமே வியந்து பாராட்டுகிறது. நம்முடைய பழக்க-வழக்கம், பண்பாடு, கலாசாரம் போன்றவைகள் எளிமையாகயிருந்தாலும், அவைகளனைத்தும் மனிதனுடைய அன்றாட வாழ்க்கையோடு என்றென்றும் இணைந்திருக்கின்றன. அவற்றுள் சில சிறப்பு அம்சங்களைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

வணக்கம் சொல்லுங்க...

ஒருவரையொருவர் சந்திக்கும் போது அல்லது இல்லத்துக்கு வருகை தரும் வருகையாளரை இருகரங்கள் கூப்பி, உதடுகள் வணக்கம், நமஸ்காரம் அல்லது நமஸ்தேயென்று உச்சரித்தபடி வரவேற்கிறோம். இன்னொருவரைப் பார்த்து நமஸ்காரமென்று சொல்லும் போது இருவருடைய உள்ளங்களும், உணர்வுகளும் சந்தித்துக் கொள்கின்றன. இப்படிப்பட்ட ஆழ்ந்த பொருளடக்கத்தை கொண்ட வார்த்தைகளான வணக்கம் அல்லது நமஸ்தே போன்றவைகளை உச்சரிக்கும் போது நமக்குள்ளே பக்தி கூடிய சக்தியும் பிறக்கிறது. தலைகுனிந்து, இருகரங்கள் கூப்பி நமஸ்காரமென்று சொல்லி வருகையாளரை வரவேற்பு செய்யும் பாணியில் அன்பு, மனிதநேயம் நிறைந்திருக்கிறது. வணக்கம், நமஸ்காரம், நமஸ்தே போன்ற சொற்களை உச்சரிக்கும் போது நமக்குள்ளே சக்தி பிறக்கிறது, பக்தி பெருகுகிறது, தன்னம்பிக்கை வளருகிறது.

அரசமரம் சுற்றலாமா?

ஸ்ரீமத் பாகவதம் அரசமரத்தின் பெருமைகளைப் பற்றி வெகு அழகாக எடுத்துரைக்கிறது. மரங்களுக்குள்ளே அரசமரம்; மிகவும் புனிதமான மரமென்று கிருஷ்ணபரமாத்மா கீதையில் போதிக்கிறார். தினமும் அரசமரத்தை பூஜிப்பவர்களுடைய வாழ்க்கையில் என்றென்றும் சந்தோஷங்கள் நிரம்பியிருக்கின்றன. அரசமரம், மகாவிஷ்ணுவினுடைய இருப்பிடமென்று புராணங்கள் குறிப்பிடுகிறது. அரசமரத்தினுடைய வேரில் மகாவிஷ்ணு வாசம் செய்வதாகவும், அடிமரத்தில் கிருஷ்ணபரமாத்மா குடியிருப்பதாகவும், அதனுடைய கிளைகளில் நாராயணர் வாசம் புரிவதாகவும், அரசமரத்தினுடைய இலைகளில் ஹரி குடிகொண்டிருப்பதாகவும், அரசமரத்தினுடைய பழங்களில் அனைத்து தேவர்களும் குடியிருப்பதாக ஸ்கந்த புராணம் சொல்லுகிறது.

ஜபமாலை அவசியமா?

முன்காலத்து முனிவர்கள், ரிஷிகள், சாதுக்கள் ஆகியோர்களை அடையாளப்படுத்தும் போது, கைகளில் ஜபமாலை, உதடுகள் பகவானை உச்சரித்தபடியே தியானத்தில் அமர்ந்த வண்ணமாக புகைப்படங்களில் பார்த்திருக்கலாம். ஜபமாலை பல வகைகளைக் கொண்டது. தாமரைவிதைகளாலான ஜபமாலையை வைத்துள்ள இல்லத்தில் என்றென்றும் சந்தோஷம் நிறைந்திருக்கிறது. சிவப்பு ரத்தினக்கற்களாலான ஜபமாலை செல்வத்தை பெருக்குகிறது, ருத்திராக்ஷ மாலை பயத்தை அகற்றி, நோய் நொடியில்லாத நீண்ட ஆயுளைத் தருகிறது, ஹரித்ரா ஜபமாலை தடைகளைப் நீக்கி, காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறது. சின்னசின்ன சங்குகள், துளசி போன்றவைகளால் செய்யப்பட்ட ஜபமாலை மகாவிஷ்ணு கூடவேயிருப்பதாக உணர்வைக் கொடுக்கிறது. இத்தகைய சிறப்புகளைப் பெற்ற ஜபமாலைகள் நம்முடைய சாஸ்திரத்தில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

தீபமேற்றுவது சரியா?

இல்லத்தில் தீபங்களை ஏற்றி கடவுளை வணங்குவது பாரத நாட்டினுடைய பாரம்பரிய வழக்கமாகும். கடவுளுடைய சன்னதியில் குத்து விளக்கேற்றி கண்களை மூடி தியானம் செய்யும் போது அந்த தீபமானது நம்முடைய மனதில் இருக்கும் அறியாமை எனும் இருளை அகற்றுகிறது, பிரகாசத்தை கொடுக்கிறது, அறிவை வளர்க்கிறது. மனதில் நினைத்த காரியம் கைகூடுவதற்கு மக்கள் நெய்தீபமேற்றி பகவானை பிரார்த்தனை செய்கிறார்கள். தீபமேற்றி இருகரங்களைக் குவித்து பகவானை பிரார்த்தனை செய்யும் போது எல்லா வினைகளும் அகன்று இல்லம் சுபிட்சம் பெறுகிறது.

மந்திரம் சொல்வதால் பலனா?

இந்து சமய வழிபாட்டில் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் சில மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி ஒவ்வொரு மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு ஓம் என்று சொல்லிக் கொண்டு உச்சரிப்பது நல்லது. அப்படியே மந்திரங்களை தவறுதலாக உச்சரித்தாலும் ஓம் என்கிற வார்த்தை இந்தப் பிழையை சரி செய்து அருள் புரிகிறது. ஓம் என்று சொல்லிக் கொண்டு செய்யப்படுகிற காரியம் நிறைவேறுகிறது. ஓம் என்று உச்சரிக்கும் போது நமக்குள்ளே ஒரு சக்தி பிறக்கிறது, மனம் அமைதி அடைகிறது, அறிவு தெளிவு பெறுகிறது. ஓம் என்கிற உச்சரிப்போடு தொடங்குகிற ஒவ்வொரு காரியமும் வெற்றியோடு முடிவடைகிறது.

விநாயகர் வழிபாடு

ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வேண்டிக் கொள்வது நம்முடைய பண்பாடு என்று சொல்லலாம். நல்ல காரியங்கள் விக்னமில்லாமல் நிகழ்வதற்கு விநாயகரை துதிக்கிறோம். விநாயகருடைய கிருபையோடு தொடக்கம் பெற்ற ஒவ்வொரு செயலும் வெற்றியோடு முடிகிறது. கடவுளுக்குள் விநாயகரை முதலாவதாக வேண்டிக் கொள்கிறோம், இந்து சமயக் கோயில்களில் விநாயகர் சன்னதி முதலாவதாக இடம் பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும்.

திருநீறு ஏன்?

இந்து சமயக் கொள்கைகளில் ஒன்றாக கெட்டவை அகன்று நல்லவை நடப்பதற்குக் கோயில்களில் ஹோமங்கள் நிகழ்த்தப்படுகிறது. ஹோமகுண்டத்தில் அக்னி வளர்த்து சந்தனம், நெய், நவதானியங்கள் ஆகியவற்றை அக்னிபகவானுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அனைத்தும் எரிந்து திருநீறாகிறது. நம்முடைய இதயத்தில் நல்ல எண்ணங்கள் உதிப்பதற்கு, நெற்றியில் திறுநீற்றை இட்டுக் கொள்கிறோம். திருநீறு என்ற வார்த்தை மனிதனுக்கு வாழ்க்கையின் சாரத்தை உணர்த்துகிறது. பிறப்பும், இறப்பும் கலந்தது மனிதனுடைய வாழ்க்கை, இறப்புக்கு பிறகு அவனுடைய உடல் அழிகிறது, அக்னிக்கு (நெருப்புக்கு) இரையாகிறது, சாம்பலாகிறது. மனிதனின் யதார்த்த வாழ்க்கைத் தத்துவத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்கு தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொள்கிறோம்.

துளசிச் செடி

முன்காலத்தில் ஒவ்வொருடைய வீட்டுப் பின்புறத்தில் துளசிமாடம் இடம் பெற்றிருப்பதைப் பார்த்திருக்கலாம். துளசிச் செடியிருக்கிற இல்லத்தில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கின்றன. பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு துளசி தேவியை வணங்கிவிட்டு தொடங்கினால் அந்தப் பணயம் தடங்கலின்றி சுமூகமாக செல்லுகிறது. மருத்துவகுணம் கொண்ட துளசிசெடியை தூயமனதோடு பிரார்த்தனை செய்தால் நினைத்துக் கொண்ட காரியம் நிறைவேறுகிறது.

மணி அடிப்பது...ஏன்?

கோயிலில் பகவானை பிரார்த்தனை செய்வதற்கு முன்பு அவருடைய சன்னதியிலிருக்கும் மணியை அடித்துவிட்டு பகவானை வேண்டுகிறோம். பகவானை எழுப்பவதற்காக மணி அடிப்பதில்லை, நமக்குள்ளேயிருக்கிற நல்லெண்ணங்களை தட்டியெழுப்பி, மனதை கடவுளிடம் ஒருநிலைப்படுத்தி தூய உள்ளத்தோடு பிறருக்காக நாம் செய்கிற பிரார்த்தனைகள் அவருடைய சன்னதியில் நிறைவேற்றப்படுகின்றன. மேலும் கோயில் மணியின் ஒலியும் நம்முடைய காதுகளுக்கு இனிமையாக ஒலிக்கிறதல்லவா?

உருவ வழிபாடு?

விக்கிரகங்கள், மூர்த்திகள் ஆகியவைகளில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, இறைவனை அடைவதற்கு இதனை ஒரு மார்க்கமாக பயன்படுத்துகிறோம். கடவுளைப் பிரார்த்தனை செய்யும் போது நம்முடைய மனதையும், மூளையையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளே அடக்குகிறோம், அலங்காரத்தோடு காட்சி தருகிற மூர்த்தியைக் கண்குளிரப் பார்த்து ரசிக்கிறோம், அவரோடு மனம்விட்டு பேசுகிறோம், நம்முடைய குறைகளை சொல்லி அழுகிறோம், அதற்கு வேண்டிய நிவர்த்தனையும் பெற்றுக் கொள்கிறோம். விக்கிரகத்தை ஒரு மார்க்கமாக வைத்துக் கொண்டு இறைவனை அடைய முற்படுகிறோம், இந்த முயற்சி நமக்குள்ளே தூய்மையான பக்தியை வளர்க்கிறது.

-இப்படி இந்து சமயக் கொள்கைகளின் நடைமுறைகள் பல நம் வாழ்க்கையில் அர்த்தமுள்ள விசயங்களை நமக்கு உணர்த்துகிறது. இந்த உணர்தலைப் பலர் புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். அவர்கள் நம் சமயப் பண்பாட்டை உணர்ந்து அவற்றைக் கடைப்பிடித்து நல்நிலை அடைய வேண்டுகிறேன்.

ஆன்மிகமும் அறிவியலே....அரசமரத்தின் சிறப்பு

ஆன்மிகமும் அறிவியலே....அரசமரத்தின் சிறப்பு

அரச மரத்தடி விநாயகர் மட்டுமல்ல அரசமரமே சக்தி வாய்ந்தது தான். 
பெரியவர்கள் பஞ்சாயத்து பேசுவதற்கும் சிறியவர்கள் பம்பரம் விளையாடுவதற்கு 
மட்டுமே அரசமர நிழல் பயன்படுவதாக நினைப்பது தவறு. சித்திரை, வைகாசி போன்ற
மாதங்களில் மதிய நேரம் அந்த நிழலில் இளைப்பாறினாலே தோல் சம்பந்தப்பட்ட
நோய்கள் வராது. இருக்கும் நோய் கூட வீரியம் குறையும்.

மருத்துவக் குணங்கள்:

அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.

அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.

நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.

அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்......

ராஜவிருட்சம்

அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. ‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியா வில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

போதிமரம்

அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.

விஞ்ஞான உண்மை

அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

கருப்பை கோளாறு

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

பிராணவாயு

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்......

நண்பர்கள் முடிந்தளவு மேலும் பலர் அறிய உதவவும்
இந்தப் பூவுலகில் புனிதமான புண்ணிய பூமி என்று உரிமை கொன்டாட ஏதாவது ஒரு நாடு இருக்குமானால், பூவுலக ஆன்மாக்கள் தம் கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய ஒரு நாடு என்று இருக்குமானால், இறைவழியை நோக்கிச் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் தன் இறுதி வீடாக வந்தடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனிதகுலம் அன்பின் சிகரத்தை, பரந்த உள்ளத்தின் உச்ச நிலையை, தூய்மையின் உயரத்தை, அமைதியின் எல்லையை, எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக உள்நோக்கின் சிகரத்தை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் – அது தான் பாரதமாகும்.


நீங்கள் எல்லோரும் ஒரே மனத்திராக இருங்கள்.நீங்கள் எல்லோரும் ஒரே எண்ணம் உடையவராக இருங்கள்.ஒரே மனத்தவராக இருப்பதுதான் ஒரு சமுதாயத்தின் வெற்றியின் ரகசியம்.திராவிடன்,ஆரியன் முதலிய அற்ப விஷயங்களையும்,பிராமணன் பிராமணன் அல்லாதவன் என்றெல்லாம் நீங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்குந்தோறும் எதிர்கால இந்தியாவை உருவாக்கவதற்கான ஆற்றலையும் சக்தியையும் சேமிப்பதிலிருந்து மேலும்மேலும் விலகிப்போகிறீர்கள்.இந்த கருத்தொற்றுமையெல்லாம் விலகியே தீரவேண்டும்.


மனிதன் பெறக்கூடிய ஆற்றலுக்கு முடிவேயில்லை.இந்திய மனத்தின் சிறப்பு இது.ஏதாவது ஒன்றில் ஆழ்ந்துவிட்டால் அதில் மூழ்கிவிடும்,பிற விஷயங்களைப் புறக்கணித்துவிடும்.எத்தனையெத்தனையோ விஞ்ஞானங்கள் இந்தியாவில் பிறந்தன தெரியுமா?.அல்ஜீப்ரா, கணிதம் தோன்றியதும் இந்தியாவில் தான்.நியூட்டன் பிறப்பதற்க்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் புவியீர்ப்புவிதியை தெரிந்து வைத்திருந்தனர்.


தன் மனத்தை அடக்க முடிந்தவனால் மற்ற எல்லா மனங்களையும் கட்டாயமாக அடக்க முடியும்.இதனாலேயே தூய்மையும் ஒழுக்கமும் எப்போதும் மதத்தின் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளது.தூய்மையும் ஒழுக்கமும் உள்ளவன் தன்னை அடக்கியாள்கிறான்.எல்லா மனங்களும் ஒரே தன்மையுடையவை,ஒரே பெரிய மனத்தின் பகுதிகள்.களிமண் கடடி ஒன்றை அறிந்தவன்,பிரபஞ்சத்திலுள்ள களிமண் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான்.தன் மனத்தை அறிந்து அடக்குபவன் ஒவ்வொரு மனத்தைப்பற்றிய ரகசியத்தையும் அறிகிறான்.ஒவ்வொரு மனத்தையும் அடக்க வல்லவன் ஆகிறான்.


ஆண்பெண் குழந்தைகள் ஒவ்வொருவரையும் இறைவனாகப் பாருங்கள்.நீங்கள் யாருக்கும் உதவிசெய்ய முடியாது.சேவைதான் செய்ய முடியும்.அவர்களை வணங்குங்கள்,ஏழைகளிடம் கடவுளைக்காணுங்கள்,அவர்களுக்கு சேவை செய்யுங்கள்.பகவானே நோயாளியாக,பைத்தியமாக,பாவியாக நம் முன் வருகிறார்.மீண்டும் சொல்கிறேன்,இந்த உருவங்களில் கடவுளை வழிபட நமக்கு வாய்ப்பு கிடைத்தது பெறற்கரிய பேறாகும்.பிறர்மீது அதிகாரம் செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்யமுடியும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்.



நீங்கள் எங்கு சென்றாலும் தொழில் காரணமாக ஏற்படும் பிரிவினைகள் இருக்கவே செய்யும்.ஆனால் அதன் காரணமாக யாருக்கும் தனிச்சலுகை இருக்கவேண்டும் என்பதில்லை.இந்தத் தனிசலுகைகளின் தலையிலடித்து அவற்றை ஒழிக்கவேண்டும்.ஒரு மீனவனுக்கு வேதாந்தம் கற்பித்தோமானால் அவன் உன்னைப்போலவே நானும் நல்லவன்,நான்மீன் பிடிப்பவன்,நீ புரோகிதன்,ஆனால் உன்னில்போலவே என்னிலும் கடவுள் இருக்கிறார் என்று கூறுவான்.யாருக்கும் தனிச்சலுகையில்லை,எல்லோருக்கும்சமவாய்ப்புகள்.இதுவே நமக்குவேண்டும்.

---------சுவாமி விவேகானந்தர்